ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மார்ச் மாதம் வெளியீடு: HTCயின் செயற்குழு தகவல்
கூகுள் நிறுவனம் அதன் அடுத்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் பதிப்பை மார்ச் மாதம் வெளியிடப்படுவதாக HTC செயற்குழு தெரிவித்துள்ளது. HTCயின் தயாரிப்பு மேலாண்மை துணைத் தலைவரான மோ வெர்சி, கூகுளின் அடுத்த ஆண்ட்ராய்டு மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் பதிப்பை இந்தோனேஷியா, நேபால், இலங்கை போன்ற நாடுகளில் வரைவில் வெளியிடப்படும் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களில் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதுவரை, கூகுள் அதிகாரப்பூர்வமாக ஆண்ட்ராய்டு 5.1 பதிப்பு பற்றி எதுவும் அறிவிக்கவில்லை, ஆனால் இந்த ஓஎஸ்சில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் பதிப்பில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களில் சில மாற்றங்களை உருவாக்கும். ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்கும் நெக்சஸ் சாதங்களின் எண்களை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, நெக்ஸஸ் 5ல் LMY29C, நெக்ஸஸ் 9ல் LMY22E, மற்றும் நெக்ஸஸ் 6ல் LMY29C, LMY29D மற்றும் LMY22E ஆகும்.
|
Saturday, February 21, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment