தற்காலத்தில் ஆச்சர்மியக்க பல தயாரிப்புகள் வெளிவந்து கொண்டுடிருக்கின்றன. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களின் வளர்ச்சி (Information Technology Devices) அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது.
- அதாவது ஒரு மெல்லியதான புத்தகத்தை நாம் கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு செல்வதைப் போன்று, சுருளும் டேப்டாப்பையும் கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு செல்லலாம்.
- ஒரு லேப்டாப்பில் இருக்கக் கூடிய அத்தனை அம்சங்களும் இதில் அடங்கியிருக்கும். டச் பேட்(Touch Pad), ஸ்கிரீன்(Screen), தட்டச்சு விசை பலகை (Keyboard) என அனைத்துமே இருக்கும். அவை அனைத்துமே இரப்பரைப் போன்று இலகுவாக மடித்து சுருட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
- இத்தயாரிப்பு வெளிவந்த பிறகு இனி எல்லாமே சுலபம்தான். நினைத்த மாத்திரத்தில் அப்படியே எடுத்து சுருட்டிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டு போகலாம். மற்ற மடி கணனிகளுக்கு உள்ள அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் (processors, memory, storage,graphics cards) இதில் இணைந்திருக்கும் என்பது கூடுதல் தகவல்.
- நெகிழ்திரையில் (OLED SCREEN)அமைக்கப்பட்ட இந்த கணினி விரைவில் வெளிவர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கீழிருக்கும் வீடியோவில் ரோல்டாப் (Rolling out Laptop செயல்படும் விதம், பயன்படுத்தப்படும் விதம் ஆகியவற்றை எளிமையாக காணொளிப் படுத்தியிருக்கிறார்கள். பார்த்து மகிழுங்கள்...! )
நன்றி..!
No comments:
Post a Comment